வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பொள்ளாச்சியில் கொடி அணிவகுப்பு

மக்களவை தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.


கோவை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19.ஆம் தேதி ஒரே கட்டமாக நடைப்பெறவுள்ள நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பொள்ளாச்சி நகர் பகுதியில் தேர்தல் பணி பாதுகாப்பிற்றாக 100 க்கு மேற்பட்ட மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.



மேலும் வரும் ஏப்ரல் 19.ம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.



இந்த பேரணி கோவை சாலையில் உள்ள மகாலிங்கபுரம் பகுதியில் தொடங்கி காந்தி சிலை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வெங்கட்ராமன் பள்ளி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது.



இதில் மத்திய துணை ராணுவ படை மற்றும் காவல் துறையினர் என 485 பேர் கலந்துகொண்டு பாலக்காடு சாலையில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் அணிவகுப்பு பேரணி நிறைவடைந்தது.



பின்னர் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் எனவும் 100 சதவீதம் வாக்குபதிவை உறுதி செய்து பொதுமக்கள் அச்சமின்றி தங்களது ஜனநாயக கடமை மேலும் கோவை மாவட்டத்தில் பதட்டமாக உள்ள வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர் மற்றும் மத்திய துணை ராணுவப் படையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...