தமிழ்நாட்டு மீனவர்களின் துயரங்களுக்கு கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதே காரணம்- வானதி சீனிவாசன் எம்எல்ஏ விமர்சனம்

மக்கள் தொகை அதிகம் உள்ள உத்தரப்பிரதேசம், பீஹார், மேற்குவங்க மாநில மக்களுக்கு உதவக் கூடாது என்பதுதான் இண்டி கூட்டணியின் நிலைப்பாடா? என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (ஏப்ரல்.1) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்தியாவுக்கு சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தவர் இந்திரா காந்தி. அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தது அப்போதிருந்த திமுக அரசு. இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் அனுபவிக்கும் அத்தனை துயரங்களுக்கும் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதே காரணம். வெளிநாட்டுக்கு ஒரு இடத்தை கொடுத்து விட்டால் அதை மீட்பது என்பது எளிதல்ல.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. மகாத்மா காந்தியின் அகிம்சை வழியில்தான் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கொள்கையில் உறுதியுடன் இருக்கும் நாடு. இது தெரிந்தும் தூங்குவது போல நடித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மூன்று கேள்விகள் கேட்டிருக்கிறார்.

அவரிடம் மக்கள் கேட்கும் சில கேள்விகள்,

1. 2004 முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது, தமிழ்நாடு வரியாக தந்த ஒரு ரூபாய்க்கு, மத்திய காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு திருப்பித் தந்தது எத்தனை பைசா?

2.மக்கள் தொகை அதிகம் உள்ள உத்தரப்பிரதேசம், பீஹார், மேற்குவங்க மாநில மக்களுக்கு உதவக் கூடாது என்பதுதான் இண்டி கூட்டணியின் நிலைப்பாடா?

3. மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களுக்கு அன்றைய மத்திய அரசு கொடுத்த நிவாரண நிதி எவ்வளவு?

நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், அதிவிரைவு ரயில்கள், புதிய ரயில் பாதைகள், புதிய விமான நிலையங்கள், துறைமுக மேம்பாடு என 1998- 2004. வாஜ்பாய் ஆட்சியிலும், கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியிலும் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தன. இதை யாராலும் மறுக்க முடியுமா? பதில் சொல்லுங்கள் ஸ்டாலின் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...