கோவையில் தேவாலயத்தை சூறையாடிய பாதிரியர்கள் கைது – காவல்துறை நடவடிக்கை

நேற்றிரவு தேவாலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்துவதற்காக நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த சார்லஸ் சாம்ராஜ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் அத்துமீறி தேவாலய பிரார்த்தனை அரங்கிற்குள் நுழைந்து அங்கிருந்த கதவுகளை உடைத்ததுடன் சிசிடிவி கேமராக்களையும் சூறையாடினர்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சிஎஸ்ஐ., பேராலயத்தின் ஆல் சோர்ஸ் தேவாலயத்தில் ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். ஏற்கனவே இந்த தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த சார்லஸ் சாம்ராஜ் மற்றும் ராஜேஷ் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு மற்றும் தேவாலய விதிகளுக்கு மாறாக செயல்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்ததால் சிஎஸ்ஐ., பேராலய பிஷப் திமோத்தி ரவீந்தர் இருவரையும் பணி நீக்கம் செய்ததுடன் தேவாலயத்திற்கு உட்பட்ட குடியிருப்பையும் காலி செய்து வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்தார்.

உத்தரவு பிறப்பித்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இருவரும் அங்கிருந்து வெளியேறாமல் இருந்ததுடன் தொடர்ந்து தேவாலய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக அவ்விருவர் மீதும் ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நேற்று இரவு (மார்ச்.30) தேவாலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்துவதற்காக நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த சார்லஸ் சாம்ராஜ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் அத்துமீறி தேவாலய பிரார்த்தனை அரங்கிற்குள் நுழைந்து அங்கிருந்த கதவுகளை உடைத்ததுடன் சிசிடிவி கேமராக்களையும் சூறையாடியுள்ளனர்.

மேலும் சில பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து தேவாலயத்தின் செயலாளர் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ரேஸ்கோர்ஸ் போலீசார் அத்துமீறலில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். ஈஸ்டர் தினத்தில் நடைபெற்றுள்ளஇந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...