கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து கவுண்டம்பாளையத்தில் மாட்டு வண்டியில் சென்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பிரச்சாரம்

தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மாட்டு வண்டியில் சென்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.


கோவை: கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கவுண்டம்பாளையம் பகுதியில் அமைச்சர் டிஆர்பி ராஜா பிரச்சாரம் மேற்கொண்டார்.



அப்போது கட்சியினர் அவருக்கு ரோஜா மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.



பின்பு, அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் முன்னே செல்ல, அதன் தொடர்ச்சியாக மாட்டுவண்டியில் பயணம் செய்தவாறே, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.



அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.



இதனையடுத்து அப்பகுதி வடமாநிலத்தவர்கள் அமைச்சருக்கு டர்பன் அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில், இன்று (மார்ச்.30) தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மாட்டு வண்டியில் சென்று, இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து நூதனப் பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ. ரவி, திமுக மாணவர் அணி மாநில தலைவர் ராஜீவ்காந்தி, தளபதி தியாகு உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...