கோவையில் ஏப்ரல் 13 ஆம் தேதி தமிழக முதல்வர் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் - அமைச்சர் நேரில் ஆய்வு..!

வரும் 13 ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள திமுக பிரச்சார கூட்டம், எல் அண்ட் டி புறவழிச்சாலையில் நடைபெறவுள்ள நிலையில், இடத்தினை, தமிழக வீட்டுவசதி வாரியம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி இன்று நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்று பயணத்தில் ஈடுபட்டுள்ளார். 

அதன் ஒரு பகுதியாக, வரும் 13 ஆம் தேதி கோவைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தியா கூட்டணியின் கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

அதற்காக, கோவை எல் அண்ட் டி புறவழிச்சாலையில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. கூட்டம் நடைபெறும் இடத்தினை, தமிழக வீட்டுவசதி வாரியம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி இன்று நேரில் ஆய்வு செய்தார். 

ஆய்வின்போது, கோவை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, கழக சொத்துப் பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாணவர் அணி மாநில தலைவர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், தளபதி தியாகு, வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் அசோக் ஆறுக்குட்டி, பட்டணம் செல்வகுமார், மதுரை பாலா உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...