திருப்பூரில் கராத்தே செய்து காண்பித்தபடியே மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்..!

பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் ரங்கசாமி என்பவர் கராத்தே உடை அணிந்து, மாவட்ட ஆட்சியர் வளாகத்திலிருந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் இடம் வரை கராத்தே செய்தபடியே சென்றார்.


திருப்பூர்: திருப்பூரில் நான்கு சுயேச்சை வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் கராத்தே மாஸ்டர் ஒருவர் கராத்தே சீருடை அணிந்து வந்து, கராத்தே செய்தவாறு ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருப்பூர் நாடாளுமன்ற வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த இரண்டு நாட்களாக எந்த ஒரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.



இந்த நிலையில், மூன்றாம் நாளான இன்று காலை திருப்பூர் தொட்டிபாளையம் சேர்ந்த வெங்கடசாமி என்பவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.



இதேபோல நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் என 10 தேர்தல் சந்தித்த ஈரோடு அந்தியூரைச் சேர்ந்த ஷேக் தாவுத் என்பவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து சென்னையே சேர்ந்த, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன் என்பவர் நாடார் சமுதாய மக்கள் சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கொங்கு மண்டலத்தில் நாடார் சமுதாயத்தினர் புறக்கணிக்கப்படுவதாகவும் எனவே கொங்கு மண்டலத்தில் நாடார் சமுதாயத்தில் வளர்ச்சியை உறுதிப்படுத்த சென்னையில் இருந்து வந்து திருப்பூரில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.



இதேபோல, திருப்பூர் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் ரங்கசாமி என்பவர் கராத்தே உடை அணிந்து கராத்தே செய்து காண்பித்தபடியே மனு கொடுக்க வந்திருந்தார்.



மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் இடம் வரை கராத்தே செய்தபடியே சென்றார்.

திருப்பூரில் இன்று மட்டும் நான்கு சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...