உடுமலையில் பறக்கும் படைத்துறையினர் சோதனையில் ரூ.1.88 லட்சம் பறிமுதல்

முறையான ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ 1 லட்சத்து 88 ஆயிரத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், உடுமலை ஆர்.டி.ஓ வுமான ஜஸ்வந்த் கண்ணனிடம் ஒப்படைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கம்படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, உடுமலை-பெதப்பம்பட்டி சாலையில் பொட்டிய நாயக்கனூர் பிரிவு அருகே, கூடுதல் நிலையான கண்காணிப்பு குழுவினர் சரவணகுமார் தலைமையில் மகாவிஷ்ணு,கலைச்செல்வன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



இதனிடையே, அந்த வழியாக உடுமலை ராமசாமி நகரை சேர்ந்த டாக்டர் பின்னி என்பவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ 89 ஆயிரத்து 550 ஐ கொண்டு சென்றது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

இதேபோல, கூடுதல் பறக்கும் படை பிரிவு 1ல் கார்த்திக் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி,போலீசார் ஹரிஹர மணிகண்டன், சந்தோஷ்வேல் உள்ளிட்டோர் பொள்ளாச்சி- உடுமலை சாலையில் கோமங்கலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(54) என்பவர் ஒட்டி வந்த காரை நிறுத்தி சோதனை இட்டனர்.அவர் முறையான ஆவணம் இல்லாமல் ரூ 98 ஆயிரத்து 500 கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.



அதைத் தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், உடுமலை ஆர்.டி.ஓ வுமான ஜஸ்வந்த் கண்ணனிடம் பறிமுதல் செய்த பணம் ரூ 1 லட்சத்து 88 ஆயிரத்து 50 ஐ ஒப்படைத்தனர். இந்த நிகழ்வின்போது கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் உடுமலை தாசில்தாருமான ப.சுந்தரம், தேர்தல் துணை தாசில்தார் சையதுராபியம்மாள், மண்டல துணை தாசில்தார் சந்திரசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...