தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்த 6 பேர் மீது வெள்ளகோவில் காவல் நிலையத்தில் வழக்கு

சேனாபதிபாளையம் கிறிஸ்துவ தெருவில் மத வழிபாட்டுத் தலம் கட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேர்தல் புறக்கணிப்பு பேனரை வைத்த ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவில் அருகே பொது இடத்தில் தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்த 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

வெள்ளகோவில் கரூர் சாலையில் உள்ளது சேனாபதிபாளையம். இங்குள்ள ரேஷன் கடை அருகில் சாலையோரம், வரும் மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பு என பேனர் வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராகவேந்திரனுக்கு செல்போனில் தகவல் கிடைத்தது.

பறக்கும் படையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் சேனாபதிபாளையம் கிறிஸ்துவ தெருவில் மத வழிபாட்டுத் தலம் கட்ட கடந்த நான்கு வருடங்களாக அனுமதி கிடைக்கவில்லை. அரசும், அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதனால் தேர்தலைப் புறக்கணிப்பதாக தெரியவந்தது. அரசுக்குச் சொந்தமான இடத்தில் மத வழிபாட்டுத் தலம் கட்ட அனுமதி கேட்டு, அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து பொது இடத்தில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த தேர்தல் புறக்கணிப்பு பேனரை அகற்றுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அகற்றாததால் அதிகாரிகளே பேனரை அகற்றி, தக்க நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பேனர் வைத்ததாக சேனாபதிபாளையத்தைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 27), இசக்கி (வயது 27), சிலம்பரசன் (வயது 35), சைமன் (வயது 35), பிரவீன் (வயது 31), மேத்யூ (வயது 29) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...