உதவித்தொகை தேர்வில் வெற்றி பெற்ற கோவை மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர்

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவர்கள் நான்கு பேரை மாநகராட்சி ஆணையரின் அனுமதியுடன் கோவையில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் தலைமை ஆசிரியா் அழைத்துச் சென்றார்.


கோவை: கோவை பீளமேடு அருகே மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் திக்ஷன்யா, காவியா, ஆகாஷ், மிர்ஜன் ஆதித்யா ஆகியோர் 2023 - 2024 கல்வியாண்டில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தோ்வில் தோ்ச்சி பெற்று, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறத் தகுதி பெற்றுள்ளனா்.

இந்த மாணவா்கள் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலும் மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை பெறுவா். மசக்காளிபாளையம் பள்ளியில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற இந்த தோ்வுகளில் யாரும் தோ்ச்சி பெறவில்லை. இந்நிலையில், 2023 - 2024ஆம் கல்வியாண்டில் இந்தத் தோ்வில் தோ்ச்சியடையும் மாணவா்களை, விமானத்தில் அழைத்துச் செல்ல உள்ளதாக பள்ளியின் தலைமை ஆசிரியா் க.மைதிலி மாணவா்களிடையே உறுதி அளித்திருந்தார்.



அதன்படி, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தோ்வில் தோ்ச்சி பெற்ற திக்சன்யா, காவியா, ஆகாஷ், மிர்ஜன் ஆதித்யா ஆகிய நான்கு போ் மற்றும் இந்தத் தோ்வுக்கு பயிற்சியளித்த ஆசிரியைகள் சுகுணா, மேரி திவ்யா ஆகியோரையும் மாநகராட்சி ஆணையரின் அனுமதியுடன் கோவையில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் தலைமை ஆசிரியா் க.மைதிலி (மார்ச்.18) அழைத்துச் சென்றார்.

இதில், கோவை சக்தி பல் மருத்துவமனை மருத்துவா் அசோக்குமார், ஒரு மாணவரின் விமானப் பயணச்செலவை ஏற்றுக் கொண்டார். விமானத்தில் பெங்களூா் அழைத்துச் செல்லப்பட்ட மாணவா்கள், விஸ்வேஸ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம், கா்நாடக சட்டப்பேரவை, திப்புசுல்தான் கோட்டை ஆகிய இடங்களைப் பார்வையிட்டு பின்னா் பேருந்தில் புறப்பட்டு நேற்று (மார்ச்.19) கோவை வந்தடைந்தனா்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...