கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விக்கல் எடுத்து தவித்த மூதாட்டி – தண்ணீர் கொடுத்து உதவிய பெண் காவலர்

கணவர் இறந்துவிட்ட நிலையில் என்னை பார்த்துக் கொள்ளாமல் சொத்துக்களை மட்டும் எழுதி தருமாறு தனது மகன் கொடுமை செய்வதாக மூதாட்டி கருப்பாத்தாள் புகார் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அவர்களது மனுக்களை அளிக்க வந்திருந்தனர். அதன் ஒருபகுதியாக சூலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் வசித்து வரும் 85 வயதான கருப்பாத்தாள் என்ற மூதாட்டி தனது மகன் தன்னை கவனித்துக் கொள்ளாமல் சொத்து மட்டும் எழுதித் தருமாறு கேட்டு தகராறு செய்வதாக கூறி இளைய மகள் ருக்மணியுடன் நான்கு சக்கர நாற்காலியில் மனு அளிக்க வந்திருந்தார்.



மனு அளித்து விட்டு வெளியில் வந்த நிலையில் ருக்மணி மூதாட்டியை ஆட்சியர் அலுவலகத்தில் ஓரமாக அமர வைத்துவிட்டு உண்பதற்கு சிற்றுண்டி வாங்கி கொடுத்துவிட்டு மனு சம்பந்தமாக அலுவலர்களை பார்க்க சென்றுள்ளார். மூதாட்டி சிற்றுண்டியை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது விக்கல் எடுத்துள்ளது.

அப்போது தண்ணீர் பாட்டிலை கூட எடுத்து தண்ணீரை குடிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த பவானி என்ற பெண் காவலர் ஓடிச்சென்று மூதாடிக்கு தண்ணீர் குடிக்க உதவியுள்ளார். அதனை தொடர்ந்து அந்த மூதாட்டி பெண் காவலர் தலையில் கை வைத்து நன்றாக இருக்க வேண்டும் என ஆசீர்வாதம் செய்தார். அதை பெண் காவலரும் பணிவாக ஏற்றுக்கொண்டார்.



இது குறித்து மூதாட்டி கருப்பாத்தாள் கூறுகையில், தனது கணவர் அரசு வேலை செய்து வந்ததாகவும் தனக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் இருப்பதாக கூறினார். கணவர் இறந்துவிட்ட நிலையில் தன்னுடைய இளைய மகள் ருக்மணி தான் தன்னை கவனித்துக் கொள்வதாகவும் ஆனால் என்னுடைய மகன் குணசேகரன் என்னை பார்த்துக் கொள்ளாமல் சொத்துக்களை மட்டும் எழுதித் தருமாறு கேட்டு துன்புறுத்தி வருவதாகவும் கொடுமை செய்வதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து ருக்மணி கூறுகையில் அம்மாவை பார்ப்பதற்கு கூட என்னுடைய அண்ணன் குணசேகரன் வருவதில்லை எனவும், மருத்துவ செலவுகளையும் ஏற்றுக் கொள்ளாமல் சொத்தை மட்டும் எழுதிக் கொடுக்க நிர்பந்திப்பதாக தெரிவித்தார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...