உலக வரைபடங்களை அடையாளப்படுத்தும் கோவையை சேர்ந்த 2 வயது சிறுவன் – 10க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று சாதனை

உலக வரைபடங்கள், கண்டங்கள், தேசிய கொடிகளின் பெயர்களை கூறி அசத்திய 2 வயது சிறுவன் சாய் சித்தார்த்துக்கு அமெரிக்கன் உலக சாதனை புத்தகம், வோர்ல்ட்ஸ் யங் ப்ரில்லியன்ட் என்ற பட்டத்தையும், லண்டன் ஹார்வர்ட் பல்கலைகழகம், பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.



கோவை: கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் ராஜலட்சுமி தம்பதி. இவர்களுடைய குழந்தை சாய் சித்தார்த்(2 வயது). மணிகண்டன் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் நிலையில் பல்வேறு விதமான புத்தகங்கள், இந்திய மற்றும் உலக வரைபடங்கள், தேசிய கொடிகள் என பொது அறிவு குறித்த கேள்விகளுக்கு தயாராகும் வகையில் வீட்டில் வாங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில் இவற்றை அடையாளம் காண்பதில் மழலை சிறுவன் சாய் சித்தார்த்தின் ஆர்வத்தை கண்ட மணிகண்டன் மற்றும் அவரது மனைவி சிறுவனுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.



இதில் அனைவரும் வியக்கும் வகையில் சிறுவன் சாய் சித்தார்த் உலக வரைபடங்கள் மற்றும் கண்டங்கள், தேசிய கொடிகளின் பெயர்களை கூறி அசத்தியுள்ளார். இவரது இந்த சாதனையை பாராட்டி அமெரிக்கன் உலக சாதனை புத்தகம் வோர்ல்ட்ஸ் யங் ப்ரில்லியன்ட் என்ற பட்டத்தையும், லண்டன் ஹார்வர்ட் பல்கலைகழகம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரபடுத்தி உள்ளது.

இதே போல பல்வேறு உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்த இரண்டு வயது குழந்தை சாய் சித்தார்த்தை பல்வேறு தரப்பினரும் தற்போது பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...