வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் உலக மகளிர் தினம் கொண்டாட்டம்

உலக மகளிர் தின விழாவில் கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, ஆடல் பாடல் போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வால்பாறை நகராட்சியில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி தலைமையில் வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மகளிர் தின விழாவை கொண்டாடினர்.



இவ்விழாவில் கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, ஆடல் பாடல் போட்டி, பேச்சுப்போட்டி போன்றவைகள் நடத்தப்பட்டு மகளிர்கள் அனைவரும் சந்தோஷமாக கொண்டாடினர்.



தூய்மை பணியாளர்களுக்கு புதிதாக மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்து எடுக்கும் வாகனங்கள் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து வால்பாறையில் நீண்ட நாளாக செயல்பட்டு வந்த மக்கும் குப்பை, மக்கா குப்பையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட உரம் தயாரிக்கும் பணி நிறைவடைந்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.



பொதுமக்களிடமிருந்து வாங்கப்படும் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை நகராட்சி குப்பை கிடங்கில் அமைக்கப்பட்டுள்ள உரம் தயாரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்று அங்கு பிரித்து எடுக்கப்பட்டு இயந்திரங்கள் மூலம் அரைக்கப்பட்டு, அதை உரமாக தயாரித்து தமிழக வேளாண் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டு உரங்களில் உள்ள நன்மைகளை ஆய்வு செய்து பின்பு 5 கிலோ, 10 கிலோ, 20 கிலோ, 50 கிலோவாக பேக் செய்யப்பட்டு, கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் வீதாம் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.



அதை நகரமன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் விற்பனை செய்து துவக்கி வைத்தனர். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று கூறி வந்த நிலையில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் நகர மன்ற தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்வில் நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், துணை பொறியாளர் கோகிலா செந்தில்குமார், வீரபாகு மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...