பொள்ளாச்சியில் பாஜக சார்பில் பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதி கோரிக்கை பெட்டி அறிமுகம்

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜக சார்பில் உங்கள் விருப்பம் எங்கள் உத்தரவாதம், மீண்டும் மோடி வேண்டும் மோடி என அச்சிடப்பட்ட பெட்டி தயார் செய்யப்பட்டுள்ளது.


கோவை: பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் பொதுமக்களிடமிருந்து வாக்குகளை பெறுவதற்கு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகளை பெறுவதற்கு தேர்தல் வாக்குறுதி கோரிக்கை பெட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜக சார்பில் உங்கள் விருப்பம் எங்கள் உத்தரவாதம், மீண்டும் மோடி வேண்டும் மோடி என அச்சிடப்பட்ட பெட்டி தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதி கோரிக்கை பெட்டி அறிமுக நிகழ்வு பொள்ளாச்சியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



இதில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் பாஜகவினர் முன்னிலையில் பெட்டியை அறிமுகப்படுத்தினார்.



இது குறித்து மாவட்ட தலைவர் வசந்தராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, இந்த பெட்டி 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வைக்கப்பட்டு பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கைகளை மனுக்களை பெறப்பட்டு இதை பாஜகவின் தேர்தல் வாக்குறுதியாக தயார் செய்யப்பட்டு அந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

கடந்த காலத்தில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் உங்கள் ஸ்டாலின் என்ற நிகழ்வுகள் மூலம் பொதுமக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் என்ற தலைப்பில் புகார் பெட்டி வைத்து மனுக்களை பெற்றார். இப்பகுதியில் பொதுமக்கள் ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் செயல்படுத்தபடும், தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கபடும், தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் வழங்கபடும், மதுக்கடைகள் மூடப்படும், நகை கடன் ரத்து செய்யப்படும், அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்றார்கள்.

தற்போது 33% பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இது எந்த வாக்குறுதியிலும் நிறைவேற்றவில்லை. இவை அனைத்தும் கோரிக்கை மனுக்களாகவும் பெற்றனர். மாறாக இந்த பெட்டி மூலம் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் பிரதமர் மோடி ஆட்சி அமைந்தவுடன் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...