கோவையில் வரும் 10ஆம் தேதி தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி - மாவட்ட ஆட்சியர் தகவல்

கண்காட்சியில் மகளிர்த் திட்டம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களின் கைவினைப் பொருட்கள் கொண்ட அரங்கமும், பொது சுகாதாரத்துறையின் சார்பில் மருத்துவ முகாமும் அமைக்கப்படவுள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (மார்ச்.8) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி என்ற தலைப்பில், இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சரின் திட்டங்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், வருகின்ற அன்று (10.03.2024) ஒருவாரத்திற்கு காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில், தினசரி காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெறவுள்ளது.

இப்புகைப்படக் கண்காட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள், அரசின் சிறப்பு திட்டங்களான, கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டம், மக்களுடன் முதல்வர், மக்களை தேடி மருத்துவம், இன்னூர் காப்போம் திட்டம், காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்து, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், கல்லூரி கனவு, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண், நம்ம ஊரு சூப்பரு, மீண்டும் மஞ்சப்பை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் இடம்பெறவுள்ளன.

மேலும், இக்கண்காட்சியில் மகளிர்த் திட்டம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களின் கைவினைப் பொருட்கள் கொண்ட அரங்கமும், பொது சுகாதாரத்துறையின் சார்பில் மருத்துவ முகாமும் அமைக்கப்படவுள்ளது.

இப்புகைப்படக் கண்காட்சியினை, வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வருகின்ற (10.03.2023) அன்று மாலை 6மணிக்கு காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தொடங்கிவைத்து பார்வையிட உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையாளர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த இப்புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...