உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவி மீது தாக்குதல் – மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் மன்னிப்பு

போராட்டத்தை மாணவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த முதல்வர் கல்யாணி ஒரு மாணவியின் செல்போனை பிடுங்கி, தலை முடியை பிடித்து இழுத்து தாக்கியதாக சக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. கல்லூரியில் காலை மற்றும் மாலை என இருப்பிரிவுகளில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் மாலை வகுப்பில் 3-ம் ஆண்டு இளங்கலை வணிகவியல்(B.com) படிக்கும் மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது.

அப்போது வேறு துறையைச் சார்ந்த மாணவர்களுக்கும் அதே நேரம் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் மாலை 4 மணியளவில் இளங்கலை வணிகவியல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவர்கள் போராட்டத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அங்கு வந்த முதல்வர் கல்யாணி ஒரு மாணவியிடம் செல்போனை பிடுங்கியும் தலை முடியை பிடித்து இழுத்து தாக்கியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.



இதற்கிடையில் கல்லூரிக்கு வந்த ஆசிரியர் வாசுதேவன் என்பவரும் மாணவர்களை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி முதல்வரை சிறைபிடித்து 5 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் கல்லூரியில் துணை வட்டாட்சியர் சந்திரசேகர், காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் ஆகியோர் கல்லூரி முதல்வர் கல்யாணி மற்றும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது முதல்வர் அறையில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் கல்லூரி முதல்வர் மன்னிப்பு கேட்டதால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

உடுமலை அரசு கலைக் கல்லூரி முதல்வர் மாணவி ஒருவரின் தலைமுடியை இழுத்து தாக்கிய சம்பவத்தில் முதல்வர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மாணவர்கள் 5 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் உடுமலை அரசு கலைக்கல்லூரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...