கோவை ஈஷாவில் நடைபெற்ற யக்‌ஷா 2-ஆம் நாள் விழாவில் மக்களை மயக்கிய குமரேஷின் வயலின் இசை – சுஹாசினி மணிரத்னம், சுதா ரகுநாதன் பங்கேற்பு

யக்‌ஷா கலைத் திருவிழாவில் வித்வான் ஆர்.குமரேஷ் குழுவினர் நிகழ்த்திய வயலின் இசை நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இந்நிகழ்ச்சியை தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டவர்களும் நேரில் கண்டு ரசித்தனர்.


கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் யக்‌ஷா கலைத் திருவிழாவின், இரண்டாம் நாளான இன்று வித்வான் ஆர்.குமரேஷ் குழுவினர் நிகழ்த்திய வயலின் இசை நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. பிரபல திரைப்பட நடிகையும், இயக்குனருமான சுஹாசினி மணிரத்னம் மற்றும் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரான சுதா ரகுநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.



குமரேஷ் தனது 5 வயதில் வயலின் வாசிக்க தொடங்கினார். தமது 10 வயதிற்குள்ளாகவே 100 மேடைகளை கண்டு குழந்தை மேதையாக உருவெடுத்தார். இவருடைய 40 ஆண்டுகால இசை அனுபவத்தில் உலகின் பல்வேறு மேடைகளில் வயலின் இசைக் கச்சேரி நடத்தியுள்ளார். யக்‌ஷா இரண்டாம் நாள் விழாவில் இவர் தனது இனிமையான வயலின் இசையால் மக்களை மகிழ்வித்தார்.

அவருடன் தனது பன்முகத் திறனுக்கு புகழ்பெற்றவரான வித்வான் ஸ்ரீ கே.யூ. ஜெயசந்திர ராவ் மிருதங்கம் வாசித்தார். இவரோடு சேர்ந்து நவீன இசையையும் பாரம்பரிய இசையையும் செறிவுர கலந்து இசைக்கும் வித்வான் ஸ்ரீ பிரமத் கிரண் தபளா இசைத்தார். இந்நிகழ்ச்சியை தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டவர்களும் நேரில் கண்டு ரசித்தனர்.



யக்‌ஷா கலைத் திருவிழாவின் நிறைவு நாளில் (மார்ச் 7) இந்தியாவின் முன்னனி நடன கலைஞரான பத்ம ஸ்ரீ ஆனந்தா சங்கர ஜெயந்த் குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கலை நிகழ்ச்சிகள் ஈஷாவில் உள்ள சூர்யகுண்டம் மண்டபம் முன்பாக தினமும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...