தாராபுரம் அருகே மூலனூர் பகுதியில் ஆட்டுச் சந்தை துவக்க விழா - ஒரு கிலோ 600 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை விற்பனை

மூலனூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் ஆட்டுச்சந்தை துவங்கப்பட்டுள்ளது. ஆட்டுச் சந்தை துவக்க விழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பேரூராட்சியில் உள்ள அண்ணா நகர் பகுதியில் ஆட்டுச் சந்தை துவக்க விழா நடைபெற்றது. இந்தச் சந்தைக்கு மூலனூர் பேரூராட்சி செயலாளர் தண்டபாணி முன்னிலையில் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர் தலைவருமான இல.பத்மநாபன் தலைமையில் ஆட்டுச் சந்தை துவக்க விழா நடைபெற்றது.

மூலனூரில் நடைபெறும் ஆட்டுச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை காலை 5-மணிக்கு நடைபெறும். மூலனூர் பேரூராட்சி சந்தை பகுதியில் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகள் சந்தை கடந்த 10-வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. மூலனூர் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் வாரச்சந்தைக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் இன்று ஆட்டுச் சந்தை திறப்பு விழா நடைபெற்றது.



மூலனூர் வாரச்சந்தைக்கு மூலனூர், அண்ணா நகர், பெரமியம், கிலாங்குண்டல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிரிட்ட காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். மூலனூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் ஆட்டுச்சந்தை துவங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் இன்று துவக்க விழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஒரு கிலோ 600 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...