போக்குவரத்துக்கு பூங்காவில் பள்ளிக் குழந்தைகளுக்கு சைக்கிள் ஓட்டும் பயிற்சியினை கோவை மாநகர காவல்துறை ஆணையர் துவக்கி வைத்தார்


கோவை பி ஆர் எஸ் மைதானத்தில் உள்ள போக்குவரத்துக்கு பூங்காவில் (ட்ராபிக் பார்க்) இன்று இரண்டு தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாலைவிதிகள் கடைபிடிப்பது, முறையாக சைக்கிள் ஓடுவது ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதனை கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் துவக்கி வைத்தார்.



இதனைத்தொடர்ந்து பள்ளிக் குழந்தைகள் மத்தியில் அமல்ராஜ் பேசுகையில், விபத்து என்பது அனைவருக்கும் நடக்கக் கூடியதே ஆகும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விபத்து எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், அந்த விபத்துக்கு முன்பு நாம் சாலைவிதிகளை கடைபிடித்தோமா என்பதுதான் கேள்வி?. சாலை விதிகளை அடுத்தவர் பாதுகாப்பிற்கு மட்டுமின்றி நம் பாதுகாப்பிற்காகவே கடைபிடிக்க வேண்டும்.



கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சாலைவிபத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் சாலைவிதிகளை மீறியவர்கள் ஆகும்.



இன்று குழந்தைகளாக உள்ள நீங்களே நாளை சாலையில் வாகனத்தை இயக்கப்போகிறீர்கள். அதற்காக இன்று முதலே சாலைவிதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்' என்றார்.



இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவை மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன், உதவி ஆணையர் கொடி செல்வன் (கிழக்கு), ஆய்வாளர் ஐயர்சாமி (கிழக்கு) ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் நிறைவாக சிறப்பான முறையில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...