ஈஷா மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து ஆலந்துரையில் புதிய மின்சார மயானம் திறப்பு

கோவை மாவட்டம், ஆலந்துரை பஞ்சாயத்தின் சார்பில் அப்பகுதிக்கு ஒரு மின்மயானம் வேண்டும் என பல்வேறு காலமாக கோரிக்கைகள் எழுந்துவந்தது. அக்கோரிக்கையை ஏற்று ஈஷா அறக்கட்டளையும், லயன்ஸ் கிளப்பும் இணைத்து புதிய மின்மயானம் ஆலந்துறை பஞ்சாயத்திற்கு உட்பட்ட தோம்புலிபாளையம் என்னும் பகுதியில் திறக்கப்பட்டது.



இந்த மின்மயானம் அமைக்க ஈஷா அறக்கட்டளையின் சார்பில் ரூ.27 லட்சமும், லயன்ஸ் கிளப்பின் சார்பில் கட்டுமான பொருட்களும், வாகனமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் துவக்கவிழாவில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று துவக்கிவைத்தார். 



இந்த மின்மயானத்தினை ஈஷா அறக்கட்டளையே பொறுப்பேற்று நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் நஞ்சுண்டாபுரம், துடியலூர், போத்தனுர், வீரகேரளம், காரமடை, தொண்டாமுத்தூர் மற்றும் சென்னையில் மைலாப்பூர், நெசப்பாக்கம் ஆகிய 8 பகுதிகளில் ஈஷா அறக்கட்டளை மின்மயானத்தினை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...