கோவை சித்தாப்புதூர் பகுதியில் பொதுத்தேர்வு எழுதும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 363 பள்ளிகளில் 127 மையங்களில் பொது தேர்வு நடைபெறுவதாகவும், இதில் 15,847 மாணவர்கள், 18,412 மாணவிகள் தேர்வு எழுதுவதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.


கோவை: 12ம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று துவங்கியுள்ளன. கோவை மாவட்டத்தை பொருத்தவரை 127 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 33,659 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் கண்காணிப்பு பணியில் 300 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்தாப்புதூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று (மார்ச்.1) நேரில் பார்வையிட்டார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், கோவை மாவட்டத்தில் 363 பள்ளிகளில் 127 மையங்களில் பொது தேர்வு நடைபெறுவதாகவும், இதில் 15,847 மாணவர்கள், 18,412 மாணவிகளும் தேர்வு எழுதுவதாக தெரிவித்தார்.

மன அழுத்தம் இன்றி மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வேண்டும் என்று அமைச்சர் கூறியதையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். மாற்றுத்திறனாளர் மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். கோவை மாவட்டத்தில் அனைத்து தேர்வு மையங்களையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தேர்வு எழுதக்கூடிய அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...