கோவையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் வளாகத்தினை திறந்து வைத்தார் மாவட்ட ஆட்சியர்

குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.1.01 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 6 மையங்கள், தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் வளாக மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.46க்குட்பட்ட இரத்தினபுரி, கணபதி நஞ்சப்பன் வீதியில் ரூ.1.01 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் (எல் & டி எம்பிடிஏ மிசைல் சிஸ்டம்ஸ் லிமிடெட்) கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் வளாகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலையில் இன்று (29.02.2024) திறந்து வைத்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.46க்குட்பட்ட இரத்தினபுரி, கணபதி நஞ்சப்பன் வீதியில் சாய்பாபா காலனி, ரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 120 குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.1.01 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 6 மையங்கள், தனியார் பங்களிப்புடன் (எல் & டி எம்பிடிஏ மிசைல் சிஸ்டம்ஸ் லிமிடெட்) கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் வளாக மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி குழந்தைகள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியின் போது, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, எல் & டி எம்பிடிஏ மிசைல் சிஸ்டம்ஸ் லிமிடெட் தலைமை நிர்வாகி ரவி கட்டாரியா, நிர்வாக தலைவர் அமுல்கேத்திரா, ஒருங்கிணைந்த குழங்தைகள் மேம்பாட்டு சேவைகள் மாவட்ட திட்ட அலுவலர் முருகேஸ்வரி, குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர்கள் கவிதா பப்பி, ஆண்டாள், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...