கோவை மத்திய தந்தி அலுவலகம் அருகில் கட்டட தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி இபிஎப் திட்டத்தையும் அமுல்படுத்த வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உட்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டட தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கட்டட மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களின் சமூக சட்ட நலன்களை பாதுகாக்க அகில இந்திய கட்டடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் மகா சம்பளமும் மற்றும் தமிழ்நாடு ஏ ஐ டி யு சி கட்டடத் தொழிலாளர் சங்கம் இணைந்து, நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தின் மூலமாக கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.

இன்று 29.02.2024 காலை 10:30 மணிக்கு கோவை மத்திய தந்தி அலுவலகம் அருகில் கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டக்காரர்கள் கொடுத்துள்ள மனுவில், இந்தியாவில் 10 கோடிக்கும் மேல் கட்டட கட்டுமானத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

கட்டுமானத் தொழிலாளர்களுக்காக 1996 கட்டுமானத் தொழிலாளர் மத்திய சட்டமும், மத்திய நல வரி வசூல் சட்டமும் ஏற்படுத்தப்பட்டது. இந்த சட்டங்கள் தனித்தனி சட்டங்களாகவே தொடர வேண்டும் என்றும், இந்த சட்டங்களை எந்த குறியீட்டிலும் இணைக்க கூடாது என்றும் வேண்டுகிறோம்.

கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களின் சமூக சட்ட நலன்களை பாதுகாக்க 5% சதம் நலநிதி உயர்த்தி நிர்ணயித்து உரிய காலத்தில் காரராக வசூலிக்க வேண்டும். 60 வயதான தொழிலாளர்களுக்கு மாதம் குறைந்தது ஓய்வூதியமாக ரூபாய் 6,000/- வழங்க வேண்டும். தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை குறிப்பாக அகில இந்திய கட்டட மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களின் மகா சம்மேளனம் AICBCW, தமிழ் நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கம் AITUC பிரதிநிதிகளை வாரிய நிர்வாக அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமனம் செய்ய வேண்டும்.

நாடு முழுவதும் கட்டப்பட்டு வரும் கோடிக்கணக்கான கட்டுமான பணி இடங்களில் பெருமளவு விபத்துக்கள் நாள்தோறும் நடக்கிறது. பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தேவையான மருத்துவ உதவி கிடைப்பதில்லை. பத்து கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி இபிஎப் திட்டத்தையும் அமுல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும். நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மத்திய சட்டம் 9/281 ஏ விதியின் படி தீபாவளி பரிசாக ரூபாய் 5000 பாண்டிச்சேரியில் வழங்கப்படுவதைப் போல வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ ஐ டி யூ சி மாவட்ட பொது செயலாளர் சி.தங்கவேல், தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொது செயலாளர் எல்.செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட கவுரவ தலைவர் காளப்பட்டி செல்வராஜ், செயலாளர் எஸ்.பி. தியாகராஜன், மாவட்ட துணைப் பொதுச் செயலாளர் கோட்டை நாராயணன், மாவட்ட செயலாளர் வால்பாறை தனபாண்டியன், மாநில செயலாளர் சி.நந்தினி, மாவட்ட துணைத் தலைவர் ஜே.கலா, மாவட்ட பொருளாளர் என்.சோமசுந்தரம், வேடப்பட்டி கிருஷ்ணன், ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...