கோவை காரமடையில் கலப்பட மது தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்தவர் குண்டர் சட்டத்தில் கைது

மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி, பிரவீன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில் கலப்பட மதுபானம் தயார் செய்ததாக பிரவீனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.



கோவை: கோவை மாவட்டம், காரமடையில் கலப்பட மதுபானம் தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஹனுமந்தப்பா மகன் பிரவீன் என்பவரை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினா் 2024 ஜனவரி 16-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.

அதன் பின்னா் அவா் பிணையில் வெளியே வந்துவிட்டார். இந்நிலையில், இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட பிரவீன் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் பரிந்துரை செய்திருந்தார். அந்தப் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி, பிரவீன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவின் அடிப்படையில் கலப்பட மதுபானம் தயார் செய்ததாக பிரவீனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...