மாதப்பூரில் நாளை என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவுவிழா கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மைதானம் முழுவதும் கண்காணிப்பு

நாளை மாநாடு நடைபெறக்கூடிய சூழலில், பல்லடம் நகரில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதோடு, பிற மாவட்டங்களில் இருந்து பல்லடத்திற்கு வரும் கனரக வாகனங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு மாற்று வழிகளில் செல்லவும், டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்க காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மாநாடு நாளை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதனைத் தொடர்ந்து மாதப்பூரில், மாநாடு நடைபெறும் மைதானத்தில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தாமரை வடிவில் மேடை அமைக்கப்பட்டு, ஐந்து லட்சம் அளவிலான பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில், இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.



மேலும், மைதானம் முழுவதும் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு போலீசார் மைதானம் முழுவதும் தீவீர சோதனையை மேற்கொண்டனர். பார்வையாளர்களுக்கிடையில் பிரதமர் திறந்தவெளி வாகனத்தில் வருவதற்காக தார்த்தளம் அமைக்கும் பணியானதும் நடந்து வருகிறது.

மேலும் கண்காணிப்பு கேமராக்கள் கொண்டு மைதானம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 6000 த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாநாடு நடைபெறக்கூடிய சூழலில், பல்லடம் நகரில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதோடு, பிற மாவட்டங்களில் இருந்து பல்லடத்திற்கு வரும் கனரக வாகனங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு மாற்று வழிகளில் செல்லவும், டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்க காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...