கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கே.வி.கே.நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாநகராட்சி கல்வி நிதியின்கீழ் ரூ.48.00 இலட்சம் மதிப்பீட்டில், கூடுதலாக மூன்று வகுப்பறைகள் கட்டும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (26.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.96க்குட்பட்ட சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட் பகுதியில் மூலதன மானிய நிதி திட்டத்தின்கீழ் ரூ.67.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கழிப்பிடம் மற்றும் பேவர் அமைக்கும் பணியினை மாநகராட்சி

ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடித்து உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து வார்டு எண்.97க்குட்பட்ட கே.வி.கே.நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாநகராட்சி கல்வி நிதியின்கீழ் ரூ.48.00 இலட்சம் மதிப்பீட்டில், கூடுதலாக மூன்று வகுப்பறைகள் கட்டும் பணியினையும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது தெற்கு மண்டல தலைவர் ர.தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர் குணசேகரன், உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், செயற்பொறியாளர் (பொ) கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர்கள் சுந்தர்ராஜ், சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...