உடுமலையைச் சேர்ந்த களரி பயட்டு வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி உயரிய ஊக்கத்தொகை வழங்கி கௌரவிப்பு

விக்னேஸ்வரன் சுவடுகள் பிரிவில் வெண்கல பதக்கமும், உரிமி வீசல் பிரிவில் விசாலி வெண்கல பதக்கமும், கெட்டுக்கரி பிரிவில் ஜீவா, ருத்ரேந்தர் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.


சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் தேசிய, சர்வதேச போட்டியில் பதக்கம் வென்ற 601 பேருக்கு 16.31

கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 37வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஒலிம்பிக் போட்டிக்கான தேர்வு நவம்பர் 7 மற்றும் 8ஆம் தேதி கோவாவில் நடைபெற்றது.

இதில் களரிப் போட்டி முதல் முறையாகச் சேர்க்கப்பட்டது. தமிழக அணி சார்பாக 8 பேர் கலந்து கொண்டு, அதில் நான்கு பேர் வெண்கல பதக்கம் வென்றனர். விக்னேஸ்வரன் சுவடுகள் பிரிவில் வெண்கல பதக்கமும், உரிமி வீசல் பிரிவில் விசாலி வெண்கல பதக்கமும், கெட்டுக்கரி பிரிவில் ஜீவா, ருத்ரேந்தர் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

இவர்களுக்கும் திருச்சியில் நடைபெற்ற கேலோ இந்தியா களரிப் போட்டியில் வெற்றி பெற்ற சுர்ஜித்திற்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயரிய ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.

இந்த ஊக்கத் தொகை விளையாட்டு வீரர்களின் மேற்படிப்பிற்கும், குடும்ப பொருளாதாரத்திற்கும் பெரும் உதவிகரமாக இருக்கும் என்றும், உயரிய ஊக்கத் தொகை வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு களரிப் பயட்டு செயலாளர் வீரமணி ஆசான் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...