மண்ணை கொட்டி வெயிட் ஏத்தறாங்க, குப்பை எடுக்காம சிட்டி மோசமா இருக்கு - கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தினர் புகார்

சதர்ன் கம்பெனி சரியா குப்பை எடுக்கவில்லை என புகார் சொல்கிறார்கள் எனவும், ஆனா குப்பை கிடங்குக்கு போற குப்பை வெயிட் மட்டும் அதிகமா இருக்கு எனவும், குப்பை வெய்ட் அதிகமாக்கிறதுக்காக ரோட்டோரம் கிடக்கிற மண், ஜல்லி, கல் என எல்லாத்தையும் பொறுக்கி போட்டு அதிக டன் குப்பை எடுத்ததா கணக்கு காட்டுகிறாங்க எனவும் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் செயலாளர் கேசிபி இன்பரா நிறுவன நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ் வெளியீட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை மாநகராட்சியில் காண்டிராக்டர்ஸ் சங்கத்தை சேர்ந்த 25 ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை, குப்பை அகற்றும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்கள்.

இந்த நிலைமையில் 6 மாதம் முன்பு வெளி மாநிலத்தை சேர்ந்த சதர்ன் கம்பெனிக்கு மொத்தமா காண்ட்ராக்ட் கொடுத்துட்டாங்க. 25 காண்ட்ராக்டர் செய்த வேலையை அந்த ஒரு கம்பெனி செய்றாங்க. இப்போ மொத்தமும் பிரைவேட் அப்படிங்கிற நிலைமை உருவாகியிருச்சு. அந்த சதர்ன் கம்பெனி சரியா குப்பை எடுக்கவில்லை என புகார் சொல்கிறார்கள். ஆனா குப்பை கிடங்குக்கு போற குப்பை வெயிட் மட்டும் அதிகமா இருக்கு. குப்பை வெய்ட் அதிகமாக்கிறதுக்காக ரோட்டோரம் கிடக்கிற மண், ஜல்லி, கல் என எல்லாத்தையும் பொறுக்கி போட்டு அதிக டன் குப்பை எடுத்ததா கணக்கு காட்டுகிறாங்க.

கடந்த காலங்களில் எடுத்ததை விட இப்போ 500 டன் அதிகமாக வர மாதிரி சொல்றாங்க. கடந்த காலங்களில் 25 காண்டிராக்டர்கள் குப்பை எடுக்கும் வேலை செய்த போது பெரும்பாலான இடங்களில் குப்பை இல்லாமல் சுத்தமா இருந்துச்சு. ஆனா இப்போ குப்பைகள் பல இடங்களில் அதிகமாக இருக்கிறது. அந்த கம்பெனி ஏன் வேலை செய்யவில்லை என மாநகராட்சியும் கேட்கவில்லை.

அந்த கம்பெனியை விட்டா வேற வழி இல்ல அப்படிங்கற மாதிரி அப்படியே விட்டுட்டாங்க. வெயில் காலமாக இருக்கிறதால பரவாயில்ல.

இதே மழை காலமாக இருந்தால் தேங்கி கிடக்கிற குப்பையால வேகமா நோய் பரவியிரும். மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணிக்கு அனுபவம் வாய்ந்த காண்ட்ராக்டர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். மொத்தமாக 5 ஆண்டுகளுக்கு தனியார் கம்பெனிக்கு ஒப்பந்தம் கொடுத்துவிட்டு அவர்கள் சரியாக வேலை செய்யாவிட்டாலும் அப்படியே விடுவது சரியல்ல. குறைந்தபட்சம் 4 ஒப்பந்ததாரர்களுக்காவது பணியை பகிர்ந்து கொடுத்து இருந்தால் ஒருவர் சரியாக செய்யாவிட்டாலும் இன்னொருவர் மூலமாக பணியை செய்ய வைத்திருக்க முடியும். மாநகராட்சியில் இருக்கிற காண்ட்ராக்டர்களுக்கு குப்பை அகற்றும் பணி சம்பந்தமாக பயிற்சி கொடுத்திருக்கலாம்.

ஆனா பொதுவா மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் குப்பை அகற்றும் பணியை சரியா வேலை செய்யல என தகவல் பரவியிருக்கிறது. இது மன வருத்தம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் பணி செய்த போது சிறப்பாக இருந்தது. இவ்வாறு கேசிபி சந்திர பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...