கோவை மாநகர காவல்துறையினருக்கு ரோந்து பணிகளுக்காக எலக்ட்ரிக் ஆட்டோக்கள்

ரோந்து பணிகளுக்காக 5 எலக்ட்ரானிக் ஆட்டோக்களை தனியார் நிறுவனங்கள் அர்ப்பணித்துள்ளதாகவும், முதல் கட்டமாக இந்த ஆட்டோக்களை காவல் நிலையங்களுக்கு ஒப்படைக்கப்பட்டு ரோந்து பணியை தீவிர படுத்த உள்ளதாகவும் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ரோந்து பணிகளுக்காக எலக்ட்ரிக் ஆட்டோக்கள் தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இன்று (பிப்.22) துவக்கி வைத்தார்.

இந்த எலக்ட்ரிக் ஆட்டோவில் சைரன் கேமரா வசதிகள் உள்ளது. மேலும் இதில் ஆறு பேர் அமர்ந்து செல்லலாம். இதனை மாநகரில் நெரிசல் நிறைந்த பகுதிகளில் பயன்படுத்த இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதல்கட்டமாக 5 ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகர காவல் ஆணையர், ரோந்து பணிகளுக்காக 5 எலக்ட்ரானிக் ஆட்டோக்களை தனியார் நிறுவனங்கள் அர்ப்பணித்துள்ளதாகவும், முதல் கட்டமாக இந்த ஐந்து ஆட்டோக்களை காவல் நிலையங்களுக்கு ஒப்படைக்கப்பட்டு ரோந்து பணியை தீவிர படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். இதில் பல்வேறு வசதிகள் இருப்பதாகவும் காவல்துறைக்கு பயன்படும் வகையில் இருக்கும் எனவும் கூறினார்.

இவற்றை வடவள்ளி, கரும்புக்கடை உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்ப இருப்பதாகவும், காவலர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் ஆட்டோவிலிருந்து பொதுமக்களிடம் பேசுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், குறுகலான பாதைகளில் சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஸ்ரீ மகா சக்தி ஆட்டோ ஏஜென்சி தன்னார்வ தொண்டு அமைப்பினர் உடனிருந்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...