கோவை சுப்பிரமணியம்பாளையத்தில் சிகரம் கலைக்குழுவினர் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வள்ளிக் கும்மி பயிற்சி

சுப்பிரமணியம்பாளையத்தில் ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கலைக்குழு ஆசிரியர் ஆ.அருண்குமார், வள்ளி கும்மி ஆசிரியர் கிணத்துக்கடவு இரத்தினசாமி வாத்தியார், கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ரேவதி மற்றும் குழுவினர் தலைமையில் வள்ளி கும்மி பயிற்சி தொடங்கப்பட்டது.


கோவை: கோவை சுப்பிரமணியம்பாளையத்தில் சிகரம் கலைக்குழுவினர் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வள்ளிக் கும்மி மற்றும் ஒயிலாட்ட பயிற்சி வழங்கினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர். கோவையில் சிகரம் கலைக்குழுவினர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தங்களது கலைக்குழு வாயிலாக தமிழர்களின் பாரம்பரிய நடனங்களான ஒயிலாட்டம், வள்ளி கும்மி, ஜமாப் மற்றும் காவடியாட்டம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை இலவசமாக அளித்து பல்வேறு இடங்களில் அரங்கேற்றம் நிகழ்த்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு மாவட்டம், சுப்பிரமணியம்பாளையத்தில் ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கலைக்குழு ஆசிரியர் ஆ.அருண்குமார், வள்ளி கும்மி ஆசிரியர் கிணத்துக்கடவு இரத்தினசாமி வாத்தியார், கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ரேவதி மற்றும் குழுவினர் தலைமையில் வள்ளி கும்மி பயிற்சி துவங்கப்பட்டது.

தொடர்ந்து ஒயிலாட்டமும் பயிற்றுவிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் 5 வயது முதல் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...