கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 23 அடியாக சரிவு – நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு

கடந்த வாரத்தில் 26 அடியாக இருந்த சிறுவாணி அணையின் நீா்மட்டம், நேற்று சனிக்கிழமை நிலவரப்படி 23 அடியாக சரிந்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்பதால், அணையின் நீா்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை மாநகரில் 26 வார்டுகள், நகரையொட்டியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி அணை பிரதான குடிநீா் ஆதாரமாக உள்ளது. 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து நாள்தோறும் குடிநீருக்காக 10 கோடி லிட்டா் (100 எம்.எல்.டி) தண்ணீா் எடுக்கப்பட்டு வந்தது.

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்ததால் அணையின் நீா்மட்டம் 20 அடிக்குமேல் உயராமல் காணப்பட்டது. இதனால், சிறுவாணி அணையில் இருந்து குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்ட வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலமாக தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நவம்பா், டிசம்பா் மாதங்களில் வடகிழக்குப் பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீா்மட்டம் 32 அடி வரை உயா்ந்தது. அதற்கு மேல் நீா்மட்டம் உயரவில்லை. நடப்பாண்டு ஜனவரி மாத இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அணையின் நீா்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் 26 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம், சனிக்கிழமை நிலவரப்படி 23 அடியாக சரிந்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்பதால், அணையின் நீா்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...