பொள்ளாச்சி அருகே நவமலை வனப்பகுதியில் காட்டு யானையை ஆபத்தான முறையில் உயர் ஒலி விளக்குடன் விரட்டிய நபருக்கு அபராதம்

உயர் ஒலியுடன் (ஹைபீம்லைட்) வாகனத்தை இயக்கி யானையை அபாயகரமாக விரட்டிய கோட்டூர் பகுதியை சார்ந்த மிதுன் என்பவருக்கு வனஉயிர் பாதுகாப்பு சட்ட பிரிவில் நடவடிக்கை எடுத்து வனத்துறையினர் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மிக முக்கியமான பகுதியான நவமலை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் பயணிக்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நவமலை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் உள்ளிட்டவை அதிகமாக நடமாடுவதால், மனித விலங்கு முரண்களை தடுக்கும் விதமாக, வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் நவமலை பகுதியில் தோட்டத்திற்கு சென்ற கோட்டூர் பகுதியை சார்ந்த மிதுன் என்பவர் உயர் ஒலியுடன் (ஹைபீம்லைட்) வாகனத்தை இயக்கி யானையை அபாயகரமாக விரட்டி இருக்கின்றார். மிரண்டு ஓடும் அந்த யானை, வனப்பகுதிகளுக்குள் நுழைந்து ஓடுகின்றது. இதனை அந்த நபர் தனது சமூக வலைதள பக்கத்திலே பகிர்ந்து இருக்கின்றார்.



இந்த வீடியோவை வைத்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அந்தக் கார் வெள்ளை நிற ஸ்கார்பியோ என்பது தெரியவந்தது. இந்த வாகனத்தை ஓட்டி வந்தது கோட்டூரை சார்ந்த மிதுன் என்பதனை அறிந்து வனஉயிர் பாதுகாப்பு சட்ட பிரிவில் நடவடிக்கை எடுத்த வனத்துறையினர், மிதுனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Newsletter

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...