திருவோடு ஏந்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விசிக நிர்வாகி போராட்டம்

வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும், இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட விசிக நிர்வாகி சுசி.கலையரசன் குற்றம் சாட்டினார்.


கோவை: கோவை மாவட்ட ஆதிதிராவிடர்நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் மக்களுக்கான வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்து, விசாரணை முடிந்த பிறகும் பட்டா வழங்காமல் இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மண்டல செயலாளர் சுசி.கலையரசன் கோவணம் கட்டி கொண்டும், திருவோடு ஏந்தியும் இன்று (பிப்.12) போராட்டத்தில் ஈடுப்பட்டார்.



இவருடன் சுமார் 10க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



மேலும் கோவையில் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்டெடுத்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் முன்வைத்தனர்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுசி.கலையரசன்,வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும், இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும்குற்றம்சாட்டினார்.

இதன் காரணமாகவே கோவனம் கட்டி, திருவோடு ஏந்தி மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்தப் போராட்டம் மெத்தனமாக செயல்படும் அரசு அதிகாரிகளை கண்டித்து என்றும், கூட்டணிக்கும் போராட்டத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.



இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...