தை அமாவாசையை முன்னிட்டு திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் மாட்டுவண்டிகளுடன் விவசாயிகள் வழிபாடு

முன்னோர்கள் கூறிய அறிவுரையின்படி தங்களது கால்நடைகள் நோய் நொடியின்றி நீண்ட நாட்கள் நலமுடன் இருக்க மாட்டுவண்டிகளுடன் வந்து தை அமாவசையை அன்று கோயிலில் தரிசனம் செய்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் தை அமாவசையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்தனர். மேலும் உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம், கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மாட்டுவண்டிகளில் வருகை புரிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

முன்னோர்கள் கூறிய அறிவுரையின்படி தங்களது கால்நடைகள் நோய் நொடியின்றி நீண்ட நாட்கள் நலமுடன் இருக்க மாட்டுவண்டிகளுடன் தை அமாவசையை அன்று தரிசனம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் எனவும், காங்கேயம் இனம் நாட்டு மாடுகள் வளர்ச்சி பெருகும் என பல ஆண்டுகளாக முன்னோர்கள் கூறிய அறிவுரையின் பேரில் பல ஆண்டுகளாக வருகிறோம் என்றும் இதனால் கால் நடைகள் நோய் நொடியின்றி நலமாக தொடர்ந்து இருப்பதாகவும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் தை அமாவாசை முன்னிட்டு உடுமலை திருமூர்த்தி மலை அமண லிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்கு உடுமலையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...