கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரிவோர் நல வாரியத்தில் அலுவலர்சாரா உறுப்பினர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கோவை ஆட்சியர் அழைப்பு

நல வாரியத்தில் அலுவலர்சாரா உறுப்பினர்களை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் மற்றும் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை உடையவர்களாக இருத்தல் வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று (பிப்.7) வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நல வாரியத்தின் மூலம் நலவாரிய உறுப்பினர்களுக்கு விபத்து நிவாரணம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவி தொகை, முதியோர் உதவித் தொகை, போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேற்படி நல வாரியத்தில் அலுவலர்சாரா உறுப்பினர்களை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் மற்றும் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

எனவே விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவர குறிப்புகளுடன் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, வயது, முகவரி, கிறிஸ்தவர் என்பதற்கான சான்று, தற்போதைய முகவரி, ஆதார் எண், கல்வித் தகுதி, தொழில், குடும்ப உறுப்பினர் விவரம், தொலைபேசி எண், ஆற்றிய சேவை அடங்கிய விவரங்களுடன் மூன்று பிரதிகளில் விண்ணப்பித்தல் வேண்டும்.

தகுதியான விண்ணப்பங்கள் அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.

Newsletter

ரத்தினபுரியில் வீட்டின் முன் விளையாடிய குழந்தை நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு

கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகரில் ஒரு வயது ஆண் குழந்தை வீட்டின் முன்பு விளையாடும்போது சரியாக மூடப்படாத நிலத்தடி தண்ணீர் தொட...

Toddler Dies After Accidental Fall into Water Sump in Coimbatore

Dhanvanth, a one-year-old child, died after he allegedly fell into an underground water sump near his house in Rathinapu...

Man Severely Beaten by Public Over Alleged Chain-Snatching Attempt Near Pappampatti

A video showing members of the public assaulting a man allegedly caught after attempting to snatch a gold chain from a w...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டுக்கான முதலாமாண்டு B.E/B.Tech மாணவர்களுக்கான YUVA 2026 வரவேற்பு ந...

Special Weekly Trains Announced Between Sambalpur and Podanur

To cater to the increasing travel demand, Southern Railway will operate weekly special trains between Sambalpur in Odish...

கோவை சிங்காநல்லூரில் உரிமையற்ற 74 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்...