மூலப் பொருட்களின் விலை ஏற்றம் - திருப்பூரில் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம்

மூலப் பொருட்களின் விலையை குறைக்க கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தம் மற்றும் விற்பனை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மூலப் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக ஹாலோ பிளாக் உற்பத்தி தொழில் பாதிப்பு அடையும் என்பதால் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கடந்த மாதம் கிரஷர் உற்பத்தியாளர்கள் ஜல்லி, எம்சாண்ட், பி-சாண்ட் போன்ற பொருட்களின் விலையை யூனிட் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அதிகப்படுத்தியதால் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் மூலப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மூலப் பொருட்களின் திடீர் விலை ஏற்றத்தால் ஹாலோ பிளாக் கற்களின் விலையை ஆறு ரூபாய் வரை அதிகரித்து விற்பனை செய்து வருகின்றனர். கடும் விலையேற்றத்தால் பொதுமக்களும், கட்டுமான துறையினரும் ஹாலோ பிளாக் கற்களை வாங்க தயக்கம் காட்டுவதால் திருப்பூர் மாவட்டம் முழுவதும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஹாலோ பிளாக் கற்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன.

இந்நிலையில் மூலப் பொருட்களின் விலையை குறைக்க கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தம் மற்றும் விற்பனைகளை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல் விலை உயர்வு என்பதால் அதற்கு மாற்றாக ஹாலோ பிளாக் வாங்கி பயன்படுத்தி வீடு கட்டுவதை வாடிக்கையாக கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ஐந்து கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிப்பு ஏற்படும் எனவும், அரசுக்கு நாழரை கோடி ரூபாய் வரை வரி இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 25,000 மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...