பன்னிமடை ஊராட்சிச் செயலரை மாற்றக் கோரி உள்ளிருப்பு போராட்டம் - வெற்றி கண்ட 10 ஊராட்சிக் கவுன்சிலர்கள்

ஊராட்சி செயலர் செழியன் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும், அரசு திட்டங்களை கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும், இதனால் திட்டங்கள் முறையாக பொதுமக்களுக்கு சென்றடைவதில்லை எனக்கூறி 8 கவுன்சிலர்கள் பன்னிமடை ஊராட்சி அலுவலகத்தின் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை துடியலூரை அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சியில் தங்கள் வார்டுகளுக்கு சரிவர பணிகளை ஒதுக்காத ஊராட்சிச் செயலரை மாற்றக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வெற்றி கண்ட 10 ஊராட்சிக் கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சியில் பன்னிமடை, கஸ்தூரிநாயக்கன்புதூர், தாளியூர், கணுவாய், கே.என்.ஜி.புதூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குடியிருந்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ரத்தினம் பி.எஸ்.எம் மருதாசலம் தலைவராகவும் மற்றும் துணைத்தலைவர் அருள்குமார் உட்பட 15 ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். ஊராட்சி செயலாராக செழியன் என்பவர் உள்ளார்.



இந்த நிலையில் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலர் செழியன் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும், அரசு திட்டங்களை கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும், இதனால் திட்டங்கள் முறையாக பொதுமக்களுக்கு சென்றடைவதில்லை, தங்கள் வார்டுகளுக்கு பணிகள் எதையும் ஒதுக்குவது இல்லை என்றும், அரசால் அறிவிக்கப்பட்டும் நலத்திட்டங்கள் மற்றும் முகாம்கள் குறித்து எந்த வித தகவல்களும் தெரிவிப்பதில்லை என்றும் கூறி ஊராட்சித் துணைத் தலைவர் அருள்குமார் தலைமையில் 8 கவுன்சிலர்கள் இன்று பன்னிமடை ஊராட்சி அலுவலகத்தின் உள்அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில் ஊராட்சித் துணைத் தலைவர் அருள்குமார், சாந்தி சிவராஜன், ராமசந்திரன், கவிதா சிவகுமார், பி.டி.கோபாலசாமி, மாரித்தாய் சுந்தரராஜ், விஜயலட்சுமி பழனிசாமி, ஜெயமணி செல்வராஜ், முருகேசன், வாசுமணி உள்ளிட்ட 10 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் போராட்டம் நீடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜென்கின்ஸ் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சிக் கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையில் ஊராட்சி செயலரை மாற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கவுன்சிலர்கள் கூறினர்.

இதைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் உயர் அதிகாரிகளிடம் பேசினார். உடனடியாக ஊராட்சி செயலரை மாற்றுவதாக கவுன்சிலர்களிடம் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 10 ஊராட்சி கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து துணைத்தலைவர் கூறும்போது, ஊராட்சி செயலரை மாற்றுவதாக கூறியுள்ளனர். மாற்றவில்லை என்றால் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். இதனால் ஊராட்சி அலுவலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...