கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயரிடம் 58 கோரிக்கை மனுக்கள் அளிப்பு

பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மேயரிடம் வழங்கப்பட்டன.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் இன்று (06.02.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.



இக்கூட்டத்தில் மேயரிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 58 நபர்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன.



இவற்றில் கிழக்கு மண்டலத்தில் 8 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 11 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 5 மனுக்களும், தெற்கு மண்டலத்தில் 10 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 17 மனுக்களும், பிரதான அலுவலகத்தில் 7 மனுக்களும் ஆகமொத்தம் 58 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் இம்மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி உதவி ஆணையர் (வருவாய்), நகரமைப்பு அலுவலர் குமார், உதவி ஆணையர்கள் கவிதா(கிழக்கு), சந்தியா(மேற்கு), எழில்((பொ)வடக்கு), பிரேம் ஆனந்த்(தெற்கு), மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...