கோவையில் சின்ன வெங்காயம் விலை சரிவு – ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை

உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால்,, பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் வாரசந்தைகளிலும், காய்கறி சில்லறை விற்பனை நிலையங்களிலும், ஏழு கிலோ சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


கோவை: கோவையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளுக்கு, சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால், சின்ன வெங்காயம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

அதன்படி கர்நாடகா மாநிலம், மைசூர் பகுதியில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும், கோவைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து இருக்கும்.

இது தவிர, கோவை மாவட்டத்தில் உடுமலை, பொள்ளாச்சி உட்பட பகுதிகளில் இருந்தும் வரத்து இருக்கும். கடந்தாண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் வெங்காயத்தின் அறுவடை பாதிக்கப்பட்டதால், ஒரு கிலோ சின்ன வெங்காயம், 100 ரூபாய் வரை விற்பனையானது.

பின், சின்ன வெங்காயத்துக்கு மார்க்கெட்டில் கூடுதல் விலை கிடைத்ததால், விவசாயிகள் பலரும் சின்ன வெங்காயத்தை பயிரிட துவங்கினர். தற்போது, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து டன் கணக்கில், சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் வாரசந்தைகளிலும், காய்கறி சில்லறை விற்பனை நிலையங்களிலும், சின்ன வெங்காயத்தின் விலை, 100 ரூபாய்க்கு ஏழு கிலோ என நேற்று (பிப்.5) வரை விற்பனையாகி வருகிறது.

இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், 'கர்நாடக மாநிலம், மைசூர் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் கிலோ ஐந்து ரூபாய் என விற்பனையாகிறது. அங்கிருந்து லாரியில் கொண்டு வரும் கட்டணம், ஆட்கள் கூலி உள்ளிட்ட செலவுகளுடன் மார்க்கெட்டுகளில் தற்போது கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவையில் உள்ள மொத்த மார்க்கெட்டுகளுக்கு நாள் ஒன்றுக்கு, 100 டன் வரத்து இருந்த சின்ன வெங்காயம், தற்போது, 200 டன் என உயர்ந்துள்ளது. மைசூர் வட்டாரத்தில் இருந்து சின்ன வெங்காயத்தின் வரவு இன்னும் அதிகரிக்கும் என்ற நிலை உள்ளதால், மேலும் விலை சரியலாம். பெரிய வெங்காயத்தின் விலை தரத்தை பொறுத்து கிலோ, 15 முதல், 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...