திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் போராட்டம்

வங்கியில் பணம் செலுத்த உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும், பட்டா வழங்குவதில் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருவதாகவும், தொடர்ந்து இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுபிறகும் கண்டுகொள்ளவில்லை என குடியிருப்போர் நலச் சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 55வது வார்டுக்குட்பட்ட பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 33 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக கடந்த 1999 ஆம் ஆண்டு குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால் அதனை எதிர்த்து நபர் ஒருவர் தொடர்ந்து வழக்கின் காரணமாக பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. பிறகு வசிக்கும் பொது மக்கள் அரசு நிர்வாகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கை திரும்ப பெற்றுக் கொண்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் அரசு நிர்ணயித்த கிரைய தொகையை செலுத்தி பட்டா பெற்றுக்கொள்ள வலியுறுத்தியது.



இதற்காக வங்கியில் பணம் செலுத்த உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும் பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும், தொடர்ந்து இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுபிறகும் காலதாமதம் செய்யப்படுவதாக கூறி உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தை சேர்ந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் தங்களை நேரடியாக சந்தித்து பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...