திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதி - விவசாயிகள் போராட்டம் முடிவு

தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் செந்திலரசன் தலைமையில் வருவாய் துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை மற்றும் விவசாயிகள் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி திட்டத்தில் உபரி நீரை திறந்து விட வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் மற்றும் நிர்வாக உறுப்பினர் சிவக்குமார் தலைமையில் பலகட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.



போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.



இந்த நிலையில் வருவாய் துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை மற்றும் விவசாயிகள் ஆகியோர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் செந்திலரசன் தலைமையில் பொதுப்பணித்துறை உடுமலை பொள்ளாச்சி கோட்ட பொறியாளர் மகேந்திரன் மற்றும் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன், தாராபுரம் குண்டடம் காவல் ஆய்வாளர் அருள் மற்றும் திருப்பூர் ஒப்பாரி பாசன சங்க விவசாயிகள் சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார், துணைத் தலைவர் குணசேகரன் ஆகியோர் நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையில் திருமூர்த்தி அணையில் இருந்து அணைக்கு தண்ணீர் வழங்குவதாக உள்ளதாகவும் உப்பாறு அணைக்கு திறந்து விடுவதாக அதிகாரிகள் கொடுத்து வாக்குறுதியை அடுத்து பாசன விவசாயிகள் ஏற்றுக் கொண்டனர்.



இதனை தொடர்ந்து போராட்டத்தை விவசாயிகள் தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...