கோவை மாநகராட்சி குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பா ஜ க-வினர் உண்ணாவிரத போராட்டம்

கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி, போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள குப்பை கிடங்கு அருகே பா ஜ க இளைஞரணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது, இக்குப்பை கிடங்கில் குப்பைகள் முறையாக தரம் பிரித்து மறு சுழற்சிக்கு உட்படுத்துவது இல்லை எனவும், குப்பைகளை மண் கொட்டி மூடப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் குப்பை கிடங்கினால் சுற்றுவட்டார பொதுமக்கள் அடிக்கடி நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுவதாகவும், குப்பை கிடங்கில் அதிகளவில் ஊழல் நடைபெறுவதாகவும் கூறிய அவர்கள், குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படுமென தெரிவித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...