சிவன்மலையில் கிராம சபை கூட்டத்தில் தனியார் மாமிசம் பதப்படுத்தும் நிறுவனத்திற்கு தடை விதிக்க தீர்மானம்


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த சிவன்மலை ஊராட்சி மன்றம் சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் புதிய சாலை வசதிகள் கேட்டும் புகார் மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.

மேலும் மாமிசம் பதப்படுத்தும் தொழிற்சாலை துவங்குவதை உடனடியாக தடைவிதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கிராமசபை கூட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி தலைமையில், துணைத்தலைவர் சண்முகம் முன்னிலையில் இந்த கூட்டமானது நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் புதிய சாலை வசதிகள் கேட்டு புகார் மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். மேலும் சிவன்மலை கிராமம் ஜே.ஜே நகர் அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மாமிச தொழிற்சாலை தொடங்க உள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க கோரி மனுக்களை ஊர் பொதுமக்கள் வழங்கினர்.

சர்வே எண் 96/1 என்ற இடத்தில் SAKS & காவியாஸ் அக்ரோ பிராசசஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் கறிக்கோழி காடை, மீன், ஆடு போன்ற பறவை விலங்குகளின் மாமிசத்தை சுத்தம் செய்து பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்காக கட்டுமான பணிகளை செய்து வருகிறார்கள்.

மேற்படி தொழிற்சாலை செயல்பட்டால் கடுமையான சுகாதார கேடு ஏற்படும் கொசு, ஈ போன்ற தொல்லைகள் அதிகமாகும், மேலும் பறவை மற்றும் கால்நடைகளை சுத்தம் செய்யும் போது அதன் அசுத்த நீரை நேரடியாக பூமியில் விடுமாறு தொட்டி அமைத்துள்ளனர்.

இதனால் அருகில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஊராட்சி குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்கின்றனர். மேலும் இது போன்ற தொழில் மக்கள் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்கு அருகில் செயல்பட அரசு சட்டவிதிகளின்படி அனுமதி இல்லை என புகார் அளித்தனர்.

மேலும் பாமாயிலுக்கு பதிலாக நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். காங்கேயம் நகராட்சி ஆனது முதல் நிலை நகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு அதை விரிவு படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், நகராட்சியுடன் சிவன்மலை இணைப்பதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், சிவன்மலைப் பகுதியானது கிராமங்களை உள்ளடக்கியது ஆகும்.

கிராம ஊராட்சிகளிலே சிறப்பான ஊராட்சி என அதிகாரிகள் பாராட்டிவருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு வழங்கும் தேசிய உறுதித் திட்டம் விவசாயிகளுக்கு கிடைக்கும் மானியம் ஆகியவைகள் கிடைக்காமலும் போகும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நகராட்சியுடன் இணைத்தால் தடைப்பட்டுவிடும் எனவும் நகராட்சியுடன் இணைக்க கூடாது என புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் இந்த மூன்று தீர்மானங்கள் உட்பட மொத்தம் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊரக உதவி இயக்குனர் (தணிக்கை) வி.ஜெகதீசன், ஆணையாளர் விமலாதேவி, மண்டலா துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...