தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு சிவன்மலை முருகன் கோவிலில் இன்று மாலை தேரோட்டம்

சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு மகா அபிஷேகத்திற்கு பிறகு காலை 7.30 மணிக்கு மகர புஷ்ய நல்வேளையில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள முருகன் கோயில் தைப்பூச தேர்த் திரு விழாவில் இன்று மாலை தேரோட்டம் நடைபெறவுள்ளது. சுப்பிரமணியர் ரதத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிவன்மலை சுப்ரமணியசாமி கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா மலை அடிவராத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் கடந்த 17-ம் தேதி தொடங்கியது.

தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு மகா அபிஷேகத்திற்கு பிறகு காலை 7.30 மணிக்கு மகர புஷ்ய நல்வேளையில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.



இன்று மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி துவங்குகிறது. தை பூசம் தேர் திருவிழாவின் ஏற்பாடுகளை, இந்தசமய அறநிலையத்துறையினர் செய்துவருகின்றனர். ஏராளமானம் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுக்க ஆவலுடன் உள்ளனர். இந்த மூன்று நாட்களும் அன்னதானம், பக்தி சொற்பொழிவு, கம்பத்தட்டம், வள்ளி கும்மி ஆட்டம் நிகழ்சிகள் நடைபெறுகிறது.

பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்துவார்கள். திருத்தேர் 3 தினங்கள் மலையை வலம் வந்து, ஞாயிறுக்கிழமை தேர்நிலை அடைகிறது. மேலும் தமிழகம் முழுவதிலுமே நேற்று தைப்பூசவிழா துவங்கிய நிலையில் சிவன்மலையில் மட்டுமே இன்று துவங்குகின்றது என்பது கூடுதல் சிறப்பு.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...