ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் பல்லடத்தில் வரும் 28ம் தேதி தென்னிந்திய தென்னை திருவிழா

தென்னைக்குள் ஊடுபயிர்கள் வளர்ப்பதன் மூலம் முன்னோடி விவசாயிகள் பலரின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது என்று ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் "தென்னிந்திய தென்னை திருவிழா” எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஈஷா மண் காப்போம் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. வரும் ஜன 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் மஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஜன.24) நடைபெற்றது. இதில் ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் அவர்கள் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது, "தென்னை விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லை.

தென்னைக்குள் ஊடுபயிர் செய்யும் விவசாயிகளை காட்டிலும் தென்னையை மட்டுமே பயிர் செய்யும் விவசாயிகளுக்கு வருவாய் குறைவாகவே உள்ளது. தென்னைக்குள் ஜாதிக்காய், பாக்கு, மிளகு, டிம்பர் மர வகைகள், இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை ஊடுபயிராக வளர்ப்பதன் மூலம் முன்னோடி விவசாயிகள் பலரின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது.

இந்த லாபகரமான சூழல் அனைத்து விவசாயிகளுக்கும் சாத்தியம். அவர்களும் தென்னைக்குள் ஊடுபயிர் செய்வதன் மூலம் வருவாயை பெருக்க முடியும் என்பதை உணர்த்த இந்த “தென்னிந்திய தென்னை திருவிழா" நிகழ்சியை ஒருங்கிணைத்துள்ளோம். இதில் 2000 விவசாயிகள் வரை கலந்து கொண்டு பயனடைய இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி தென்னிந்திய அளவில் நடப்பதால் பல மாநிலங்களில் இருந்தும் வல்லுனர்கள் மற்றும் முன்னாடி விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக, கர்நாடகாவை சேர்ந்த முன்னோடி விவசாயி சிவநஞ்சய்யா பாலேகாயி மற்றும் அருண்குமார், கேரளா பாலக்காடு பகுதியை சேர்ந்த ஸ்வப்னா ஜேம்ஸ் மற்றும் தமிழகத்தின் முன்னோடி விவசாயிகளான வள்ளுவன், ரசூல் மொய்தீன், வீரமணி என இன்னும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தென்னை விவசாயிகள் அவர்களின் வருவாயை பல மடங்கு உயர்த்துவது குறித்த தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தென்னை தேவையான எளிமையான கருவிகளை விவசாயத்திற்கு காட்சிப்படுத்த இருக்கிறோம் மற்றும் அவை விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடக்க இருக்கும் "இயற்கை சந்தையில்" 60 இயற்கை அங்காடிகள் இடம்பெற உள்ளன.

இதில் முன்னோடி விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் செய்த பாரம்பரிய காய்கறிகள், பயிர் வகைகள் மற்றும் அரிசி வகைகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்பு விவசாயிகள் 83000 93777, 94425 90077 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்" இவ்வாறு முத்துகுமார் கூறினார். அவரோடு முன்னோடி விவசாயி வள்ளுவன் அவர்கள் உடன் இருந்தார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...