கோவை கலிக்கநாயக்கன்பாளையத்தில் லஞ்சம் வாங்கிய காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம்

பொங்கல் விழாவில் பாதுகாப்புப் பணியில் இருந்த தொண்டாமுத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் மணிகண்டன் என்பவா் மேடையில் இருந்த ஒருவரை அழைத்து விழாவின் பாதுகாப்புக்கு வந்துள்ள தனக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் என்று கேட்டு வாங்கியதால், அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


கோவை: கோவை கலிக்கநாயக்கன்பாளையத்தில் அப்பகுதி மக்கள் சார்பில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தொண்டாமுத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலா் மணிகண்டன் என்பவா் மேடையில் இருந்த ஒருவரை அழைத்து விழாவின் பாதுகாப்புக்கு வந்துள்ள தனக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் என்று கேட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, காவலா் மணிகண்டன் கேட்ட ரூ.1,000ஐ பொதுமக்கள் வழங்கினா். இதை அங்கிருந்த ஒருவா் கைப்பேசியில் விடியோ எடுத்துள்ளார். இதைத் தொடா்ந்து, மணிகண்டன் லஞ்சம் வாங்கிய விடியோ ஆதாரங்களுடன் அப்பகுதி மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நேற்று (ஜன.20) புகார் மனு அளித்தனர்.

அப்போது, அங்கிருந்த காவல் துறை அதிகாரிகள், தலைமைக் காவலர் மணிகண்டனை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து ஏற்கெனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறினர். அவா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்களிடமிருந்த விடியோ ஆதாரத்தை போலீஸாரிடம் வழங்கிவிட்டுச் சென்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...