பாரூக் கொலை வழக்கில் மேலும் மூன்று பேர் கைது, நீதிபதி முன் ஆஜர்!

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த இரும்பு வியாபாரியான 31 வயது இளைஞர் மர்ம நபர்களால் சரமாரியாக கத்தியால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே மூன்று பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் மேலும் மூன்று பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களை நீதிபதி முன் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை உக்கடம் அடுத்த பிலால் எஸ்டேட் பகுதியை  சேர்ந்த அமீது எனபவரது மகன் பாரூக். உக்கடம் பழைய இரும்பு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும் பரூக்கிற்கு 3 ஆம் வகுப்பில் பயிலும் மகள் மற்றும் 6ம் வகுப்பில் பயிலும் மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு பணி முடித்து வீட்டிலிருந்த அவருக்கு சுமார் 11.45 மணியளவில் செல்போன் மூலம் அழைப்பு ஒன்று வந்துள்ளது.அதில் பேசிய மர்ம நபர் தொழில் ரீதியாக பேச வேண்டும் எனவும், உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணை அருகே வருமாறும் கூறியுள்ளார். 

இதனையடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வந்த பரூக்கை ஏற்கனவே அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்க துவங்கியுள்ளனர்.அப்போது அங்கிருந்து தப்ப முயன்ற பரூக்கை தங்களிடமிருந்த கத்தியை கொண்டு சரமாரியாக குத்தியும் வெட்டியும் நிலைகுலைய செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.இதனால் பரூக்கின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வருவதற்குள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பரூக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த உக்கடம் காவல்நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று இரு சக்கர வாகனத்திலும் ஒரு ஆட்டோவிலும் தப்பி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்த வந்த நிலையில் கடந்த 17ம் தேதி அன்ஷாத் என்பவரும் பின்னர் 20 தேதி சதாம் உசேன், சம்சுதீன் என்ற இருவரும் அடுத்தடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கடந்த இரண்டு தினங்ளாக ஜாகர், அக்ரம் ஜிந்தா, முகம்மது முனாப் உள்ளிட்ட மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் மூவரும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவரவே  அம்மூவரையும் இன்று கைது செய்து  கோவை 5 வது  குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பாக ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி மூவரையும் வருகிற ஏப்ரல் 5 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.அதனடிப்படையில் அம்மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே கோவையில் கடந்த செப்டம்பர் மாதம் இந்து முன்னனி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டி தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...