கோவையில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீவிபத்தினால் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் எரிந்து நாசம்

கோவை சாய்பாபா காலனி பகுதியில் பரசுராம் என்பவருக்கு சொந்தமாக அபிராமி பர்னிச்சர்ஸ் என்னும் பர்னிச்சர் கடை உள்ளது. இக்கடையில் இன்று காலை 11 மணியளவில் எதிர்பாராதவிதமாக இரண்டாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கவுண்டம்பாளையம் மற்றும் கோவை தீயணைப்புத் துறை அலுவலகங்களில் இருந்து இருவாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயினை அனுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்குப் பின்பு தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் அக்கடையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்கள் எரிந்து நாசமானது. 

இரண்டாவது மாடியில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக சாய்பாபா காலனி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...