3,500 ரூபாய் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது

சத்துணவு ஊழியர்களுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



சத்துணவு ஊழியர்களுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் வழங்குதிடுதல் மற்றும் ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு 3 இலட்ச ரூபாய் பணிக்கொடை வழங்குதல் ஆகிய கோரிக்களை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் அவ்வமைப்பினர் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவ்வமைப்பின் மாநில தலைவர் பழனிச்சாமி, சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும், சத்துணவு ஊழியர்களை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய அவர், இல்லையெனில் வருகின்ற ஏப்ரல் 25-ம் தேதி முதல் தமிழகத்தில் 43 ஆயிரம் சத்துணவு மையங்களையும் இழுத்து மூடி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.



இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...