உடுமலையில் பருவநிலை மாற்றம் சார்ந்த பயிற்சி - பெண் தொழில் முனைவோர் பங்கேற்பு

வணிக திட்டம் தயாரித்தல், செலவு மற்றும் விலை, உற்பத்தியை திட்டமிடுதல், சந்தை மற்றும் சந்தைப்படுத்துதல் நடைமுறை சார்ந்த பயிற்சி 3 நாட்கள் நடைபெற உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பருவநிலை மாற்றம் சார்ந்த பெண் தொழிற் முனைவோருக்கு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

உடுமலை அடுத்த போடிபட்டி ஊராட்சியில் பருவநிலை மாற்றம் சார்ந்த பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது. பயிற்சியை போடிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சௌந்தரராஜன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மகளிர் திட்டம் பாஸ்கர் முன்னிலை வகித்தார். மகளிர் கல்வி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தாராபுரம் இயக்குனர் குணசீலி வரவேற்புரை ஆற்றினார். இந்த பயிற்சியானது 3 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாள் நிகழ்வாக தொழில் முனைவோரின் திறன்கள், சந்தை ஆராய்ச்சி, ஒரு நிறுவனத்தின் சாத்தியம் உள்ளிட்ட பயிற்சி நடைபெற்றது. 2-வது நிகழ்வாக 23-ம் தேதி வியாழக்கிழமை வணிக திட்டம் தயாரித்தல், செலவு மற்றும் விலை, உற்பத்தியை திட்டமிடுதல், சந்தை மற்றும் சந்தைப்படுத்துதல் நடைமுறை சார்ந்த பயிற்சி நடைபெற உள்ளது.

3-வது நிகழ்வாக 25-ம் தேதி சனிக்கிழமை விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல் திட்டம், பணி மூலதன மேலாண்மை, பணப்புழக்கம், வணிக கணக்குகளை வைத்திருத்தல் தொடர்பான பயிற்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் தாராபுரம் ஐஸ்வர்யா நன்றி உரை கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...