கோவையில் தார்சாலை அமைக்கும் பணி - மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

வார்டு எண்.42-க்குட்பட்ட அண்ணா நகரில் தார் சாலையை முறையாக (compact) செய்யாததால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூ.50,000/- அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் தார் சாலை பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வார்டு எண்.42-க்குட்பட்ட அண்ணா நகரில் தார் சாலையை முறையாக (compact) செய்யாததால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூ.50,000/- அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.39க்குட்பட்ட கீர்த்தி நகர், அஜ்ஜனூர் பகுதியில் மாநில நிதி கழக (SFC-State Financial Corporation) திட்டத்தின்கீழ் 630 மீட்டர் தொலைவிற்கு ரூ.41.61 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம் வார்டு எண்.38-க்குட்பட்ட கிருஷ்ணா நகர் பகுதியில் மாநில நிதி கழக (SFC-State Financial Corporation) திட்டத்தின்கீழ் 415 மீட்டர் தொலைவிற்கு ரூ.27.39 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தையும்,



வார்டு எண்.41க்குட்பட்ட சென்னிமலை ஆண்டவர் நகர் பி.என்.புதூரில் (NSMT 2023-24 Package-13) நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் 341 மீட்டர் தொலைவிற்கு ரூ.7.16 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தையும் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர், வார்டு எண்.42க்குட்பட்ட அம்பேத்கர் நகரில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், அப்பகுதியில் சாலையோரம் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட பின்பு, வார்டு எண்.42க்குட்பட்ட அண்ணா நகரில் தார் சாலையை முறையாக (compact) செய்யாததால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூ.50,000/- அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்கள் பிரவின்ராஜ், லட்சுமி, சாந்தி, உதவி ஆணையர் சந்தியா, உதவி செயற்பொறியாளர் யோகசித்ரா, உதவி பொறியாளர்கள் ஐசக் ஆர்தர், விமலா, சவிதா, சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், ராஜேந்திரன், ரமேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...